Thursday, April 2, 2009

நான் படிக்க போறேன்!!!!!!!!!!

நான் ஒரு காலத்துல எதோ ஒரு புத்தகத்துல படிச்சது....
2 ம் உலக போர்ல அமெரிக்கா ஜெய்ச்சதுக்கு காரணம் அங்க உள்ள அறிவு செல்வமுன்னு. ஜெர்மனி, ஜப்பான், எல்லாம் அதுக்கு சவால் விட்டாலும் அவங்க அமெரிக்கா அளவுக்கு வரமுடியல
அமெரிக்காவுல எனக்கு பிடிச்ச ஒரே விஷயம். அங்க இருக்க knowledge exposure தான். இதுக்கு காரணம் அங்க கல்விக்கு அரசாங்கம் ராணுவத்துக்கு தர்ற அளவு முக்கியத்துவம் தருது.
நானும் நெனைக்கிறது உண்டு என்னைக்கு நம்ம நாட்ல 100% எழுத்தறிவு வரும்னு ......
விஜய்க்கு, சோனியா காந்திக்கு, கருணாநிதிக்கு (எத்தன தடவ??) டாக்டர் பட்டம் குடுக்குற கல்வி வள்ளல்கள் எல்லாம் அந்த விழாவுக்கு செலவழிச்ச காசுல நாலு கிராமத்து பையன்களுக்கு இலவசமா கல்வி தந்து இருக்கலாம்.

பாரதியார் சொன்னது எல்லாம் இவங்க மண்டயில ஏறாதா
புண்ணியம் கோடி ஆங்கொரு ஏழைக்கு எழுத்தறிவித்தல்

எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டுல இருக்குற தனியார் கல்லூரிகள் பள்ளிகளின் நிர்வாகிகள் நிறைய பேர் பழைய தாதாக்கள், சாராய வியாபாரிகள், அரசியல் செய்ய முடியாத மாஜிக்கள், இந்நாள் அரசியல் தலைவர்கள். ஹும்! இவங்க எங்க நாளைய இளைய சமுதாயத்த உருவாக்க போறாங்க?
அப்துல்கலாம் அய்யா நீங்க கனவு மட்டும்தான் காண முடியும் நடைமுறையில ஒன்னும் நடக்காது

நாம இன்னும் ஏன் அமெரிக்கா காரனுக்கும் அடுத்தநாட்டு காரனுக்கும் அறிவு இருந்தும் வேல செய்றோம்னா இந்த மாதிரி கல்விய வியாபாரம் ஆக்குறவங்க நம்ம மாணவர்கள சுயமா சிந்திக்க விடுறதே இல்லையே.
தேர்வு வெற்றி என்பது தான் அறிவு வளர்ச்சியாக பார்க்க படுகிறது

AIMS, IIT பரவாயில்ல (அதுவும் உலக அளவில நம்ம IISCயே 250 வது இடம்தான் )

அரசாங்க பள்ளியில, கல்லூரியில சேர வேண்டியது தானன்னு வெளக்கமா கேள்வி கேக்குறவங்க அங்க போயி என்ன நிலமைன்னு பார்க்கணும்.

அடிப்படை வசதிகள் இல்ல.....
மாணவர்கள் இருக்கிற அளவு ஆசிரியர்கள் இல்ல....
நானெல்லாம் அரசாங்க பள்ளியில படிச்சுதான் பெரிய நெலமைக்கு வந்தேன்னு சொல்ற புண்ணியவான்க எத்தன பேரு தான் புள்ளைய அதுல சேக்குறாங்க???

கொஞ்சமாவது சிந்தியுங்க மக்களே
ராணுவத்துக்கு செலவழிக்கிற அளவுல பாதியாவது கல்விக்கும் செலவழிக்க அரசாங்கம் முன்வரனும். இவங்க படிச்சு முன்னேறிட்டா நம்ம பொழப்பு போய்ரும்னு நெனைக்கிற அரசியல்வதிங்களுக்கு இந்த தேர்தல்ல என்ன செய்ய போறீங்க ?????

------மார்க்கண்டன்

Wednesday, April 1, 2009

ஒ போடுங்க !!!!!


நானும் ஒ விற்கு வாக்களிக்க போகிறேன் எனது நண்பர் லோகேஷின் சந்தேகம் நாம் ஒன்றிரெண்டு பேர் வாக்களிக்க விருப்பம் இல்லையென்றால் என்ன குடி முழுகி விடுமா ? எப்படியும் அவர்கள் வெற்றி பெற்று விடுவார்கள் என்பது தான் சிறு துளிதான் பெருவெள்ளம் ஆகும் நண்பரே..... 
இலவசங்கள் , மொழி, ஜாதி , பணம் அடிபடையிலேயே நமது தேர்தல்கள் நடந்து வருகின்றன. என்று கொள்கை அடிப்படையில் நடக்கின்றதோ அன்று வேட்பாளர்களுக்கு வோட்டு அளித்தால் போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டேன் பெரும்பாலான வாக்கு சாவடிகளில் கட்சி பிரதிநிதிகள் நம்மை அறிந்தவர்கள் அவர்கள் நம்மை ஒருமாதிரியாக பார்ப்பார்கள் என்றோ என்ன வேண்டாம். சிறு சிறு தயக்கங்களை விட்டு ஒழியுங்கள் கட்டாயம் வாக்களியுங்கள் .........




----நன்றி ஞாநி -----



மக்கள் சார்பாக 40 தொகுதிளிலும் நாம் நிறுத்தும் வேட்ப்பாளர் 49 ஓ. 
தயவு செய்து அவருக்கே வாக்களியுங்கள். 

நம்மிடம் இருக்கும் கடைசி சொத்தும், ஆயுதமும் நம் ஓட்டு தான். அதையும் பிடுங்க பிச்சை பாத்திரம் எந்தி வரும் பண முதலைகள் நம்மையும் அவர்களை போல லஞ்சம் வாங்குவோர்களாக மாற்ற பார்க்கிறார்கள். 

"பாதகம் செய்பவரை கண்டால் நாம் பயம் கொள்ளலாகது பாப்பா. மோதி மிதித்து விடு பாப்பா. அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா" என்றான் பாரதி. வீட்டில் இளைப்பாறாமல் வோட்டுச் சாவடிக்கு செல்வது தான் மோதி மிதிப்பதற்க்கான அற வழி. அவர் முகத்தில் உமிழும் எச்சில் தான் 49 ஓ !


அநேகமாக மே மாதம் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் கருணாநிதி கூட்டணியும் ஜெயலலிதாவும் ஒரே கூட்டணியில் இருந்தல் ஆச்ச்ரியபட வேண்டாம்

( அவர்கள் எப்போதுமே மக்கள் விரோதக் கூட்டணியில் தான் இருந்து வருகிறார்கள் என்பது இன்னோரு விஷயம் )

     ராஜபக்ஷேவுடன் சேர்ந்துகொண்டு ஈழதமிழர்களை கொன்று குவிக்கும் காங்கிரஸ் கட்சியை , தமிழகத்தின் வேரோடும் வேரடி மண்ணோடும்  ஒழித்தே தீருவோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன். அந்த காங்கிரஸ் அங்கம்  வகிக்கும்  தி.மு.க கூட்டணியில் இருக்கிறார்.

     ஒருத்தரைஒருத்தர் ஒழித்துக் கட்ட விரும்பும் இரு கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு வாக்காளர்களிடம் கூட்டாக பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் நிகழ்ச்சி இந்திய வரலாற்றிலேயே, இப்பொதுதான் முதல் முறை நடக்கிறது. பகையாளியை, உறவாடிக் கெடுக்கும் உத்தியோ என்னவோ.

     கேட்டால் காங்கிரஸுக்கு தி.மு.க.வுடன் தான் கூட்டு; வி.சி.யுடன் இல்லை என்பார்கள். வி.சி.க்கு தி.மு.க.வுடன்தான் கூட்டு; காங்கிரஸுக்குடன் இல்லை என்பார்கள்

     இதே லாஜிக்படி வி.சி.யுடன் காங்கிரஸுடனும் பா.ம.க. கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தனக்கு தி.மு.க.வுடன் கூட்டு இல்லை என்று சொல்லலாம். பா.ம.க.வுடன், வைகோவும் இடதுசாரிகளும் கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால், தங்களுக்கு காங்கிரஸ்டுடன் உறவு இல்ல சொல்லலாம். காங்கிரஸுடன் கூட்டு வைக்கும் பா.ம.க.வுடன் ஜெயலல்க்தா கூட்டு வைக்கலாம் மற்றவர்களுடன் உறவு இல்ல எனலாம்.

     பாவம் பி.ஜே.பி. அவர்களும் காங்கிரஸ், இடதுகள் இருக்கும் இதே கூட்டணியில் ஜெயலலிதாவோடு மட்டும் கூட்டு வைத்துக் கொள்ள அனுமதித்துத் தொலைக்கலாம். விஜய்காந்தும் சரத் குமாரும் ( அரசியலில் ) சின்ன வயசுக்காரர்கள். 2011 வரை காத்திருக்கலாம். இப்போது காசை வீணாக்க வேண்டாம்.

     கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆளுக்கு வெவ்வேறு 20 தொகுதிகளை எடுத்துக் கொண்டு, அந்த 20-க்குள், தங்களிடம் சரணாகதி அடைந்திருக்கும் தமிழின, தேசிய, புரட்சி வீரர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒன்று இரண்டு கொடுத்துவிட்டால், 40 தொகுதியிலும் போட்டியே இல்லாமல் தேர்தலை நடத்தி முடித்துவிடலாம்.

     ஏராளமான பணமாவது மிச்சமாகும். 

     அட. வெட்கங்கெட்டவர்களே ....

     என்ன கூட்டணி அமைக்கிறீர்கள் ? எந்தக் கொள்கயும் இல்லாமல், ஏன் எடுத்துச் சொல்ல ஒரு நியாயமான கொள்கை வெறுபாடும் இல்லாமல், சீட் பிடிப்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, ஏன் மக்களை இவ்வளவு கெவலமாக ஏமாற்றுகிறீகள் ?

     இவரகளுடய ஏமாற்றுத் திட்டங்கள் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல, பின்னரும் தொடர்பவை. எந்த கட்சிக்கு எத்தனை சீட் என்பதை பொறுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்னும் புதுப்புது கூட்டணிகளை உருவாக்கப் போகிறார்கள். ஜனநாயகத்தையும் தேசத்தயும் காப்பற்ற நிலையான ஆட்சி தேவை என்பதால், இப்படி அணி மாற வேண்டியிருக்கிறது என்று அப்போது அதற்க்கும் ஒரு நியாயம் பேசுவார்கள்.

     கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இந்தக் கட்சிகள் இப்போது செய்ய வேண்டியது என்ன ? ஒவ்வொருவரும் தனித்தனியே போட்டியிட வேண்டும். அவரவருடய அசலான மக்கள் ஆதரவு, பலம் என்ன என்பதைக் காட்ட முன்வர வேண்டும்.

     ஆனால், நிச்சயம் அப்படி இவரகள் செய்யப் போவதில்லை.

     இந்தச் சூழ்நிலையில் மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? இவ்ரகள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. 

     எப்படி நிராகரிப்பது ? தேர்தலன்று வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு நிராகரிப்பது த்ற்கொலைக்குச் சமம். வாக்குச் சாவடிக்குப் போய் இவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக ஓட்டளித்து நம் நிராகரிப்பைப் பதிவு செய்ய வேண்டும்.

     நல்லவேளையாக அதற்க்கு சட்டத்தில் அற்புதமான வழி இருக்கிறது. அதுதான் 49 ஓ!

     வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்ப்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்ல; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்ல வெண்டும் உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இது தான் 49ஓவை பதிவு செய்யும் முறை.

     இதை செய்ய கூடாது என்று நம்மை யாரும் - சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்க்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.

     ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தலின்போதே உத்தரவிட்டிருக்கிறார். அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர, இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி. வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணயத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது.

    தனியே போய் வாக்குச் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா ? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49 ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.

    தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஏழு வாரங்கள் இருக்கிறன. கொள்கையில்லமல் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொண்டு நம்மை தொடர்ந்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இயங்கும் அத்தனைக் கட்சிகளையும் நிராகரிக்க விரும்பும் அத்தனை வாசகர்களும் இந்த ஏழு வாரங்களும்  தங்கள் ந்ண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் என்று எல்லாரிடவும் 49ஓ பற்றி எடுத்துச் சொல்லி ஆதரவு திரட்டுங்கள்.
 
    49ஓ தொடர்பாஅ என்னென்ன எதிர்க்கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பப் பட்டாலும் தயவு செய்து, அவ்ற்றை அனுப்பி வைய்யுங்கள். அடுத்த ஏழு வாரங்களில் ஒவ்வொரு சந்தேகத்துக்கும் பதில் அளிப்போம். 

    அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்ய உரிமை இருப்பது போலவே, வாக்காளர்களாகிய நமக்கும் 49ஓ என்ற சட்டபூர்வமான உரிமை பற்றி பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது. வாக்கு பதிவு தினதன்று வாக்குசாவடிக்கு 100 மீ தள்ளி ஒவ்வொரு கட்சியும் மேஜை நாற்காலி போட்டு வாக்காளர் எண் ஸ்லிப் கொடுப்பது போல, 49ஓ வுக்கும் மேஜை நாற்காலி போட்டுக்கொண்டு நாமும் ஸ்லிப் கொடுக்கலாம்.

    தேனியை சேர்ந்த ஆனந்தன் என்ற அரசு ஊழியர் வி.ஆர்.எஸ் கொடுத்து விட்டு சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கம் என்ற சமூக நல இயக்கத்தின் பொது செயலாளராகப் பணியாற்றுகிறார். இதன் சார்பில் ஈரோட்டில் 49ஓ வை விளக்கி சைக்கிள் பேரணியும், வண்டியில் ஒலிபெருக்கி பிரச்சாரமும் செய்ய அனுமதி கேட்டார்கள். மாவட்ட ஆட்சியரும், அனுமதி மறுத்தார்கள். 

    தேர்தல் ஆணையத்தின் தமிழக பிரதிநிதியான நரேஷ் குப்தாவிடம் ஆனந்தன் முறையிட்டார். அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்வது போலவே சமூக நல வாக்காளர் அமைப்புகளும்  49ஓ போன்றவற்றை பற்றி பிரசாரம் செய்ய முழு உரிமை உண்டு. அவ்ற்றின் பேரணி இதர பிரசார வடிவங்களையும் அனுமதிக்க வேண்டும் கலெக்ட்டருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

-- ஞாநி


Tamilish